Monday, October 22, 2007

tamil inkural - Tamilin kuRaL: கடவுள் வாழ்த்து

tamil inkural - Tamilin kuRaL:
1.1.1கடவுள் வாழ்த்து (வழிபாடு)
Chapter. 1 - The Praise of God

This chapter is named “ ¸கடவுள் வாழ்த்து ” . கட+உள் means transcendental + within .That which is transcendental but is within ourselves.

கலைஞர் கருணாநிதி இந்த அதிகாரத்திற்கு வழிபாடு எனத் தலைப்பிட்டுள்ளார்


1. கடவுள் வாழ்த்து Chapter. 1 - The Praise of God இந்த அதிகாரம் கடவுள் வாழ்த்து எனப் பெயரிடப் பட்டுள்ளது. கடவுள் என்ற சொல்லைக் கட+ உள் என் பிரித்து விளக்கம் காண்போம். கட என்றால் எல்லாவற்றையும் கடந்து இருப்பது. எதனுள்ளும் அடங்காதது. உள் என்றால் உள்ளே உள்ளது. எதனுள்ளும் அடங்காதது எப்படி உள்ளே இருக்க முடியும்? (கலைஞர் கருணாநிதி இந்த அதிகாரத்திற்கு வழிபாடு எனத் தலைப்பிட்டுள்ளார்.வழி என்பது செல்ல வேண்டிய பாதையைக் குறிக்கும் சொல்.) வழிபடுத்தல் என்றால் செல்ல வேண்டிய பாதைக்கு இட்டுச் செல்வது என்று பொருள் கொள்ளலாம். இந்த அதிகாரம் வாழ்க்கையைப் புரிந்து பொருளோடும் மகிழ்வாயும் வாழத் தேவையான அடிப்படைகளை விளக்கி வழிகாட்டும் அதிகாரம் ஆகும்.

இந்த அதிகாரத்திலோ , வேறு அதிகாரத்திலோ கடவுள் என்ற சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தவே இல்லை. அதிகாரத்தின் தலைப்பு திருவள்ளுவர் கொடுத்ததல்ல. இறைவன் என்ற சொல்லே வருகிறது. பின்னால் வரும் அதிகாரங்களில் இறைவன் என்ற சொல் தலைவனை, அரசனைக் குறிக்கும் சொல்லாக வருகிறது.

In 1062 பசிக்கு உணவைப் பிறர் முகம் பார்த்து கையேந்தி, இரந்து, பெற்று உயிர் வாழும் நிலையில் உள்ளோர் இருப்பரேயானால், அப்படிப் பட்ட இந்த உலகை உண்டாக்கியவன் முழுமையாகக் கெட்டு ஒழியட்டும்.
உலகை இயற்றியான் என்றால் உலகை உண்டாக்கியவன். அவன் தன் பசிக்கு கையேந்தும் மனிதரை உண்டாக்கியது தவறு. அவன் கெட்டு ஒழிக என்னும் போது புலவரின் கோபமும் வேதனையும் விளங்கும்.
ஒருவனுடைய ஏழ்மைக்கு, முற்பிறவியைக் காரணமாக ஏற்று துன்பப் படுபவனை மேலும் வேதனைப் படுத்தவில்லை. கடவுள் என்ற கருத்தை ஏற்பவர் எவரும் படைத்தவனைப் பழிக்க, சபிக்க மாட்டார்கள். திருவள்ளுவர் கடவுளை ஏற்கவில்லை.

கீதை முற்பிறப்பின் பாவமே இன்றைய துன்பங்களுக்குக் காரணம் என்கிறது.
“ .. தமோகுணம் தலை தூக்கிய போது மரணம் அடைந்தால் ஒருவன் அறிவிலாக் குடும்பம் ஒன்றில் பிறப்பெடுப்பான் " (கீதை, இராசாசி 14.15)

தெய்வம் என்ற சொல் 43 , 55, 619, 1023 ஆகிய குறட்பாக்களில் வருகிறது. 619ம் குறட்பாவில் தெய்வத்தால் கொடுக்க இயலாததை ஒருவர் தன் முயற்சியால் பெற்று விடலாம் என்கிறார். இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, தெய்வம் என்ற சொல் கடவுளைக் குறிக்கவில்லை.

கல்வியே வாழ்க்கைக்கு அடிப்படையான, எந்த நிலையிலும் உதவும் செல்வமாகும். இந்தக் கருத்தைப் பல குறட்பாக்களில் உணர்த்துகிறார்.
கல்வி யற்றவர், ஒன்றும் விளையாதக் களர் நிலத்திற்கு ஒப்பர். (406)
கற்றவருக்கும் கல்லாதவருக்குமான வேறுபாடு விலங்குகளுக்கும் மனிதருக்கும் உள்ள வேறுபாடு போன்றது. (410)

கற்றல் என்பது ஏட்டுச் சுரைக்காயாக வள்ளுவர் ஏற்கவில்லை. படிப்பதைப் புரிந்து படிக்க வேண்டும். பிறருக்குப் புரியும்படி விளக்குவதற்கான அறிவு வேண்டும். படிப்பினால் படிப்பவருக்கு மட்டும் பரிந்த படிப்பில் பயனில்லை. உன்னுடைய படிப்பு பிறருக்குப் பயன் அளிக்க வேண்டும். ஆசிரியர், பொறியாளர், மருத்துவர், பிற பணியிலுள்ளோர் பிறர் புரியம்படி விளக்காத நிலையில் அவர்களால் சமூகத்திற்குப் பயனில்லை. படிப்பு , கல்வி என்பது சமூகத்தில் ஒருவர் பயன் உள்ளவராக வாழ உதவுவது. சமூகம் அனைவரும் சேர்ந்து இயக்கப் படும் ஒரு அமைப்பு. அனைவரும் பங்கு பெற வேண்டும். கல்வி அதற்கான பயிற்சியை அளிக்கிறது.
கற்றோர் சபையில் கூச்சத்தின் காரணமாக தான் கற்றதை விளக்கிச் சொல்ல இயலாதவர் நடைப் பிணமே. (730)
தான் கற்றதை கேட்பவர் புரியும்படி விளக்க இயலாதவர் வாசமில்லா பூங்கொத்து போன்றவர். (650)

முதல் அதிகாரம் தெரியாத, தெரிய முடியாத கடவுளை வாழ்த்தவில்லை. பகலன், சூரியன், உலகிற்கு முதன்மையான தேவை என்பதை முதல் குறட்பா விளக்குகிறது. இது இன்றளவும் அறிவு வழி ஏற்கப் பட்ட உண்மை. ஒரே ஒரு குறட்பா மட்டுமே. மற்ற குறட்பாக்கள் எந்தக் கற்பனைக் கடவுளையும் கூறவில்லை. அதனால்தான் இன்றளவும் திருக்குறள் உலகப்பொதுமறையாக ஏற்கப் பட்டுள்ளது.

முதல் அதிகாரத்தில் உள்ள மற்ற பாடல்கள் நல்ல வழ்விற்க்குத் தேவையானவற்றையும் அவற்றை அடையப் பயிற்சி தரும் ஆசிரியர் பற்றியும் விளக்குதிறது. வாழ்க்கையின் பொருள் பற்றி கோடிட்டுக் காட்டுகிறது. பகவத்கீதையிலும் இக்கருத்தைக் காணலாம்.

பகவத்கீதை இந்தியத் துணைக் கண்டத்தில் திருக்குறளுக்குப் பின் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்தவர்கள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். பணிவுடன் அவர்களை வணங்கி ஞானனம் பெறுவாய் Bagavat-gita IV.34.
பாபங்களுக்குள் பெரும்பாவம் செய்தவனாயினும் ஞானம் என்கிற படகிலேறி நீ எல்லாக் குற்றங்களையும் கடந்து செல்வாய்.Bagavat-gita IV.36.
ஞானத்தைப்போல் எதையும் பவித்திரமாக்கும் பொருள் வேறில்லை. .. Bagavat-gita IV.38.

But in the verses of this chapter the word கடவுள் is not used. Instead இறைவன் is used. This word இறைவன் is used in later chapters to refer to a king or a leader.

In 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் . 1062

the author curses of the creator/originator/author of the world,whoever he or she is , the poet does not refer to as God, the creator.

தெய்வம் is the word he uses in kural 43 , 55 and 619, 1023. In 619 he says that even if ' தெய்வம் ' fails sincere effort will yield suitable rewards.
In Tamil society , even to-day, families treat the dead ancesters as தெய்வம்
*********************************************************

1.Education is the basic start for life. This is stressed at various points in ThirukkuRaL.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனைர் கல்லா தவர் 406

(The person who is uneducated is like a wasteland)

விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல்
கற்றாரோ டேனை யவர். 410

(The uneducated are equivalent to animals)
not just learning, he also insists on its application , as seen in 730 and 650

உளரெனினும் இல்லாரோ தொப்பர் களனஞ்சி
கற்ற செலச் சொல்லாதார் 730

(It is not enough just to acquire knowledge ; one must be in a position to express them convincingly in the assembly of learned persons)
இணரூழ்த்தும் நாறா மலரனையரா கற்றது
உணர விரித்துரை யாதார்650

(A person who cannot express one's knowledge is like a flower withour fragrance)

The first chapter deals not with just a prayer to an unknown and undefined god. He pays respects to God by asserting the primacy of Sun in the lives of all beings on Earth. A fact of life which stands the test of any scientific inquiry . Just one verse.

All other verses are not on any imaginary gods (see 1062 where he uses the word உலகியற்றியான், where the word 'god' might have been more apt , and curses him for creating the poor and the needy and make them beg. ) .

That is where Ayyan Valluvar makes his work appeal an universal audience, which undoubtedly it is.

The rest of first chapter asserts knowledge as essential for a good life and ways of acquiring them . The meaning of life, what to expect out of it is also outlined.

[ Know that by long prostration, by question and by service, the wise who have realised the Truth will instruct thee in (that) knowledge.
Bagavat-gita IV.34.

Even if thou art the most sinful of all sinners, yet thou shalt verily cross all sins by the raft of knowledge.
Bagavat-gita IV.36.

Verily there is no purifier in this world like knowledge.
Bagavat-gita IV.38.]


படித்தல், கற்றல், அறிதல்(ch.43), உணர்தல்(read,learn,understand and experience/know, feel/apply) are the stages of education.

ch.40 education ch43 this chapter deals with knowledge (அறிவுடைமை), is given under Royalty (அரசியல்) .

This stage of one's education is necessary for a leader. In other words ,attaining this stage makes one eligible to be a leader (king). So it is given in Part II – the micro-level discussion.



1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

Corrected:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலன் முதற்றே உலகு.

எழுத்தெல்லாம் அகர முதல , அது போல உலகு ஆதி பகலன் முதற்றே .


As all letters have the letter A for their first, so the world has the ancient Sun (பகலன்) for its first.

Here the word ' பகவன் is inappropriate. ' பகலன் looks appropriate.

The Tamils worshiped the Sun-God and the ' தைப்பொங்கல் Pongal festival is the example. ஆதி பகலன் means the ancient Sun-God.

ஓலைச்சுவடியில் ல , வ இரண்டும் ஒன்று போல் தெரியுமோ?
-------------------------------------------------------------------

2. கற்றதனா லாயப யனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?


What is the use of getting educated if a person does not follow the foot-steps of the deeply-learned.

The advice is 'Learn from the Masters'

GITA : IV.34. : Understand the true nature of Knowledge by approaching the illumined souls. If you prostrate at their feet , render service , and question them with an open and guileless heart , those wise seers of Truth will instruct you in that knowledge.

----------------------------------------------------------
3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


Whoever follows the path of persons who love and appreciate flowers, live by nature, will have a long life in this earth.

Anthophilous – மலர் விருப்புடைய, பூப்பயில்கின்ற, பூமிசைகிற (Madras University Dictionary, Tamil virtual university)


----------------------------------------------------------------


4. வேண்டுதல்வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


To those who follow the footsteps of him who is void of desire or aversion, suffering and hardship shall never come.

வேண்டுதல்வேண்டாமை இலான் : person without likes and dislikes, person who transcends personal likes and dislikes .

-------------------------------------------------------------------
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்செர் புகழ்புரிந்தார் மாட்டு.

இருள்சேர் இருவினையும் சேரா (என்பது) இறைவன் (என்பதற்குப் ) பொருள் (என்று) புரிந்தார் மாட்டு புகழ் சேர் .

'Not getting perturbed by both the good and bad actions and their consequences' is what God (leader/king) means. Persons who understand this can command a reputation ( in the society ) .

இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாமல் வாழத் தெரிந்தவன் புகழ் பெறுவான்.

see verse 236, 237 where the poet says that one must live a fruitful life of reputation.

--------------------------------------------------------------------------
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தூர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.



Those shall long proposer who are truthful, disciplined, committed and has controlled the five desires of the senses.

----------------------------------------------------------------------
7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


Anxiety of mind cannot be removed, except from those who follow the footsteps (advices) of him who is superior and incomparable (in knowledge)

Learn from the masters.

COMMENT: The word தனக்கு may refer to the teacher chosen or the student himself who seeks knowledge.

In the former case the verse is explained as above.

In the latter case the verse says that the student who seeks knowledge must choose a teacher who is more knowledgeable than the student himself.

The latter interpretation seems plausible. A student cannot decide the relative merits of teachers and compare them. He is just seeker of knowledge and not knowledgeable enough to judge prospective teachers. By choosing a teacher better than oneself is a possibility. By shifting to teachers with various specialization one widens one's knowledge.
---------------------------------------------------------------------------
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

None can swim the sea of vice, but those who are follow the footsteps of him whose life is based on aRam.

அறவாழி means அறவழி வாழபவன் ஆகும்.

The word அந்தணன் does not stand for ' brahmin '.

A brahmin lives his life based on vedic teachings and abide by the manu-dharma. ARam is different from Dharma.

A person who live by the dictum of aRam is known as அந்தணன்.

The word அந்தணர் may be split as அந்த + உணர், meaning “having the involvement for the occasion.”

See also verses 29, 417,543,677,702,718,420 on 'involvement' (உணர்வு)



------------------------------------------------------------------------
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

The person who does not follow the path of him who is possessed of eight attributes, is as useless as an organ without its qualities in this world.

ஐந்தவித்தல், பொய்தீர்த்தல், ஒழுக்கம், நெறிநிற்றல், , ஆக எண்குணம். (குறள் ௬)
----------------------------------------------------------------------------
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இ¨றவனடி சேராதார்

None can swim the great sea of this birth (live a fruitful/successful life) but those who follow the footsteps of a leader or captain (who gives directions and guidance).

இ¨ற stands for a king , leader or captain see verses 388, 436, 547
------------------------------------------------------------------------------------------

12 comments:

Anonymous said...

hey your blog design is very nice, neat and fresh and with updated content, make people feel peace and I always enjoy browsing your site.

- Thomas

Uma said...

Uncle, I am super excited that you've started the blog, at long last!

I like the distinction between kadavul, iraivan, theivam - makes sense, doesn't it?

I also like the distinction between Dharma and aRam. But is that distinction just a divergence of philosophies or is there an intrinsic difference in their viewpoint? For example, is Dharma rooted in dogma versus aRam rooted in ethics? (For me that is a basic difference between Hinduism and Buddhism. Perhaps even Jainism, not sure).

Finally please do a separate posting on verses - 29, 417,543,677,702,718,420 - I would love to understand unarvu more deeply.

Anonymous said...

Get up to 100000 forum backlinks with our backlinks service & massive targeted traffic
Get great web traffic using best backlink service today. We are able post your marketing message up to 100’000 forums worldwide, get thousands of backlinks and incredible targeted web traffic in very short time. Most affordable and most powerful service for web traffic and backlinks in the world!!!!
Your post will be published up to 100000 forums worldwide your website or blog will get instant traffic and massive increase in seo rankings just after few days or weeks so your site will get targeted long term traffic from search engines. Order now:
backlinks

Anonymous said...

[url=http://www.34.qxqx.eu/motoryzacja/auto-detailing.html]odnowa lakieru[/url]
[url=http://www.76.qxqx.eu/motoryzacja/kosmetyki-samochodowe.html]kosmetyki samochodowe[/url]
[url=http://www.78.qxqx.eu/motoryzacja/auto-detailing.html]auto detailing[/url]
[url=http://www.18.qxqx.eu/motoryzacja/wosk-samochodowy.html]ochrona lakieru[/url]
[url=http://www.53.qxqx.eu/motoryzacja/wosk-samochodowy.html]odnowa lakieru[/url]

Uma said...

Uncle, why no new posts?

விருதை தோலாண்டி said...

அருமை அண்ணாச்சி.

sundharamagalingam said...

Good

Thileeban.C said...

Sir, I read both of your blogs. The explanation of first chapter was good and I liked the indepth study and the cross analysis with kurals from other chapters. Regarding the comparative analysis in the other blog of yours, that's just awesome. Why don't you publish it as a book and distribute widely. It is meaningful and enlightening and it enriched my framework of mind. If u can publish it I ll be happy that many people can get a clear idea because now there is too much rhetoric and people are confused and baffled. I learnt and got clarity from it and thanks for that. There is huge trust deficit and immoral conduct in world today, for which only remedy is to preach tirukural-aram and I congratulate for your role in that.

சாகித் said...

தமிழில் விளக்கம் தந்திருக்கலாம். திருவள்ளுவர் அல்லது திருக்குள் ஒரு நாத்திக வடிவமே என்பதா ஒரு ஆய்வுக்க கட்டுரை எழுதுங்களேன் அய்யா.

Anonymous said...

ஆங்கில SMS படிக்க சிறமப்படும் நமது சகோதர சகோதிரிகளுக்கு SMS ஐ தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் பயன்பாடு. முடிந்த வரை பகிரவும்.https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil&hl=en

விஸ்வேஸ்வரன் said...

சாதிக் அவர்களுக்கு. தமிழில் அறத்துப்பால் முழுமைக்கும் விளக்கம் அளித்து நூலாக வெளியிட்டுள்ளேன்.

தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்.

இணையத்தில் கிடைக்கும். சென்னை ஒடிசி புத்தகக்கடையில் கிடைக்கும்.
www.notionpress.com இணையத்தில் வாங்கலாம்.

kalappal kumaran said...

அன்புடையீர் வணக்கம் திருக்குறள் மிகவும் செறிவானஆய்வுரை - மகிழ்ச்சி தெய்வம் - என்ற சொல்லாட்சி தெய்வத்தன்மையைக் குறிப்பதாகக் கொள்ள இடமுண்டு என்று கருதுகிறேன் - தெய்வத்தோடு ஒப்பக் கொளல். ஆதி பகலன் - மிகச் சரியே. அகர முதல் என்று தொடங்குவதால் அக்குறட்பா ஒரு மொழி வாழ்த்தே.. ஆதி - என்னும் சொல் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அந்தணர் - பார்ப்பார் அந்தணர் ஐயர் என மூன்று வகையினர் என்பர்.விரி நூல் அந்தணர் - அறவோர் ; புரிநூல் அந்தணர் - பார்ப்பனர். அந்தணர் - சான்றோரைக் குறிக்கும் பொதுச்சொல்லாம். கடவுள் நம்பிக்கை உடையோரையும் கருத்தில் கொண்டுள்ளார் திருவள்ளுவர். என்றே கருதுகின்றேன்..